இந்த உலகை பிரத்யட்சமாக காணுவதை கொண்டு கிடைக்கும் அனுபவங்களே நிஜம்.
பிரத்யட்சமாக காணமுடியாத, அறிய முடியாத அனுபவத்தை
ஒத்துக் கொள்ளாத தத்துவமே சார்வாக மதம் எனும் லோகாயதம்.
உலகை, பிரபஞ்சத்தை, உன்னை, என்னை, கடவுள் படைக்கவில்லை
காரணம் கடவுளை காணமுடியாது.
நம் புலன்களால் அறியமுடியாத வஸ்து இல்லை என்றே அர்த்தம்
பொருள்களுக்கு மூலமான பஞ்ச பூதங்களின் சேர்க்கையுமே பிரிவுமே இந்த உலகம்
இதை சேர்க்க, பிரிக்க என்று யாரும் தேவையில்லை