கடவுள் உண்டு என்று நினைத்து சொன்ன காலத்திலிருந்தே
கடவுள் இல்லை எனும் சிந்தனையும் அதன் செயல்பாடுகளும் இருந்திருக்கிறது.
எல்லாவற்றிக்கும் இரண்டு பக்கம் உண்டு என்ற விதிக்கு
கடவுளும் தப்பவில்லை.
பிரதட்ஷணமான – தர்க ரீதியாய் கடவுளை நிருபிக்க முடியாமல் இருப்பதால்
சார்வாகர்கள் எனும் மதமே தோன்றியது என்று கூட சொல்லலாம்.
சார்வார்களின் காலம் வேதகாலமே ஆகும்.
சார்வாகர்களின் ஆரம்ப கர்த்தா பிரகஸ்பதி என அறிகிறோம்.
லோகாயதவாதிகளின் தத்துவம்
புலன்களை கொண்டு அறியும் அறிவும் அனுபவமுமே உண்மை.
மற்றபடி எல்லாம் பொய் என்பதே அவர்களின் தத்துவம்
அதனால்
அவர்களின் தத்துவத்தில்
உயிர், பிறவி, ஆன்மா, பிரம்மம் போன்ற எதுவும் கிடையாது.