உபநிடந்தங்கள் பல இருந்தாலும் அவற்றுள் 108 மிக முக்கியமானது
இந்த உபநிடந்தங்கள் வேதத்தின் கருப்பொருளை தன் உள்ளே கொண்டவை
ஒரு விதத்தில் சொல்வதாய் இருந்தால்
உபநிடதங்களில் உள்ள கருபொருளின் விளக்கவுரையே வேதம் என்று சொல்லலாம்.
இது முரண்பாடான கருத்தாக தோன்றும்
காரணம்
முதலில் தோன்றியது வேதம் என்று இருக்கும் போது
பின் வந்த உபநிடதங்களுக்கு விளக்கவுரை வேதம் எப்படி ஆகும் என்று
விஷயம் என்னவென்றால்
வேதத்தின் சாரம், சூட்சமம் எதுவோ அது மட்டுமே கொண்டது உபநிடதம்,
உபநிடத்தில் உள்ளது எல்லாம் சூத்திரங்கள் மட்டுமே.
அந்த சூத்திரங்கள் அனைத்தும் வேதத்தின் கருப்பொருளை கொண்டதே
அதனால் தான் உபநிடதங்களின் விரிவாக்கம், பாஷ்யம் வேதம்என்று சொல்ல காரணமாயிற்று.
ஆரிய தத்துவத்தின் கருவூலமாக இருப்பது வேதங்கள்.