பிணி (நோய்) தடுக்கும் கவசம்
எவ்வளவு சீர்திருத்தம் செய்து கொண்டாலும்,
தற்கால நாகரீக வாழ்க்கையிலிருந்து முற்றிலும் விலகிக் கொள்ளுதல் இயலாததாகின்றது.
இப்படி நாகரீகத்தை விலக்கி வாழ விரும்புகிறவனுக்கு
இடம், பொருள், ஏவல் செளகரியங்கள் குறைவாகவே இருக்கின்றன.
இயற்கைக்கு விரோதமாகத் திரும்பிய சமூகம்,
இயற்கைக்கு விரோதமான திட்டங்களையே வாழ்வில் பிரதானமாகக் கொண்டு விட்டது.
இத் திட்டங்கள் விரும்புகிறவனை, யஇற்கைக்கு ஒத்து வாழ முடியாதபடி வதைக்கின்றது.
மேலும் பெரும்பாலோர்
வறுமையில் உயிர்ப்பொருள், துணைப்பொருள், தேவைக்குத் தக்கபடி பிரதானப் பொருள் பெறாததால்,
சமூகமும் வறுமைச் சமூகமாகி, ஆரோக்கியமும் வயதும் குன்றுகின்றன.