நாம் இரு கைகளையும் கூப்பி இறைவனை அல்லது பெரியவர்களை வணங்குகிறோம்
அல்லது வணக்கம் சொல்கின்றோமே அதுதான் அஞ்சலி முத்திரை எனப்படும்.
இரு கரங்களையும் ஒன்றோடொன்று வைத்து விரல்களுக்கு நடுவே இடைவெளி இன்றி ஒட்டியிருக்க வேண்டும்.
தலை, கழுத்து, முதுகுத்தண்டு வளையாமல் நேராக நிமிர்ந்து இருக்க வேண்டும்.
கைகளை மார்புப் பகுதியில் இருக்கும்படி வைத்திருக்க வேண்டும்.
பலன்கள் :-
- அலைபாய்கின்ற மனதை ஒருமுகப்படுத்தும்.
- உடலில் உள்ள அனைத்து சக்தியோட்ட பாதைகளையும் சமநிலைப் படுத்தும்.
- உடல் முழுவதும் பிராண சக்தி நன்றாக பரவும்.
- மனதில் தோன்றும் கோபம், வெறுப்பு, கவலை போன்ற உணர்வுகள் நீங்கி அன்பு,கருணை மற்றும் அமைதி நிலையை உண்டாகும்.
- இறைவன் மீது பக்தியும் மற்றவர்கள் மீது மரியாதை உணர்வும் அதிகரிக்கும்.
- உடலில் இரத்த ஓட்டமும் பெப்ப நிலையும் சீரடையும்.
அஞ்சலி முத்திரையை நின்றுகொண்டும் அல்லது அமர்ந்து கொண்டு பத்மாசனத்திலும் செய்யலாம்
முடியாதவர்கள் சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம். 10 முதல் 20 நிமிடங்கள் செய்யலாம்.