“நீ அந்த வீட்டுல 2 லட்ச ரூபாயும், 50 பவுன் நகையும் திருடுனது உறுதியாயிருச்சு… நீ உண்மைய ஒத்துக்கறியா?”
“ஐயா ஒத்துக்கறேன்யா!”
“அப்போ உனக்கான தண்டனைய அறிவிச்சுடலாமா?”
“ஐயா, அதுக்கு முன்னால நம்ம மத்திய அரசாங்கத்துக்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுடுங்கய்யா!”
“உனக்கு தண்டனை கொடுக்க மத்திய அரசுக்கிட்ட நான் ஏன் கேக்கணும்?”
“ஐயா, கிரிப்டோகரன்ஸிய மோசடின்னு சொல்லிட்டு இருந்தவங்க
இப்போ அந்த வருமானத்துக்கு 30% ஜி.எஸ்.டி. கட்டுனா போதும்னு சொல்லிட்டாங்க…
ஆன்லைன் ரம்மி, ட்ரீம் 11 மாதிரி சூதாட்ட மோசடிகளுக்குகூட ஜி.எஸ்.டி. கட்டுனா அனுமதின்னு சொல்றாங்க…
உயிருக்கே ஆபத்துன்னாலும் சிகரெட், மதுவுக்கெல்லாம் அதிகபட்ச வரி கட்டுனா ஓகே வித்துக்கலாம்னு சொல்லிட்டாங்க…
அதேபோல நான் திருடுன தொகைக்கும், நகைக்கும்
எவ்வளவு % ஜி.எஸ்.டி. செலுத்தணும்னு விசாரிச்சு கட்டிட்டேன்னா இந்த திருட்டும் தப்பில்லைன்னு சொல்லிடுவாங்க.
தண்டனை தேவைப்படாதுங்கய்யா!”😊