காலமானது வருங்காலம், நிகழ்காலம், சென்ற காலம்
என மூன்று விதமாக உழலுகின்றது. இந்த காலத்தை தான்
பிரம்மா என்றும், சிவன் என்றும், விஷ்ணு என்றும் சொல்லுகிறார்கள்.
பிபீலிகாதி பிரம்மபரியந்தம் காலசக்கிரத்தில் சிக்கிக்கொண்டு
பஞ்சருத்தியங்களுக்கு அடங்கி இருக்கின்றன. ஆகையால் தான்
திரிமூர்த்திகள் காலரூபிகள் எனப்படுகிறார்கள். காலத்தினால்
விருக்ஷங்கள் பலபிராப்தி உண்டாகின்றது. தானியங்கள் பலிக்கின்றது.
ஸ்திரீகளும் ருதுமதி ஆகிறார்கள், காலத்தினால் தான் சகலவித நிறங்களும்
மாறுகின்றது. குணசுபாவங்களும் மாறுகின்றது. ஜனனமரணாதிகளும்
உண்டாகின்றது. அயனுக்கு ஒருநாள் ஆகும்போது பதினாறும்
தேவேந்திரர்கள் பிறந்து மரிக்கிறார்கள்.