சனி 4 – ல் நிற்க, லக்கினாதிபதி நீச்சமடைய சந்திரனுக்கு 10 – ல் 8 – க்குடையவர் நிற்க, ஊமை
5 – ல் குரு நிற்க, 11 – ல் சந்திரன் நிற்க காவியங்கள் செய்வார்.
2 – க்குடையவரும், சுக்கிரனும், புதனும் கூடி 6, 8, 12 – ல் நிற்க, ஊமை.
6 – க்குடையவர், சுக்கிரன், புதனும் கூடி 6, 8, – ல் நிற்க 8, 2 – க்குடையவர்களைப் பலங்குறைந்து நிற்க ஊமை, குரு பார்த்தாலும் ஊமை.
2 – க்குடையவர், தூமன், எமகண்டன் மூவரும் கூடி 8 – ல் நிற்க, ஊமை,
குரு 2- ல் நின்றால் சில நேரங்களில் வாய் குளறும். 2 – ல் சந்திரன் நின்றால் வாக்கு பங்கமில்லை.
புதன், சனி, சூரியன், மூவரும், கூடி 12 – ல் நிற்க, செவ்வாய், 8 – ல் நிற்க, ஊமை,
லக்கினத்தில் சுக்கிரனும் 3 – ல் குருவும் இருந்தால் தமிழ்ப்புலவர்.