நம்முடைய தவறால் நாம் நமக்கு வேண்டியவரை விட்டு வெகுதூரம் நகர்ந்து விட்டால்
எப்பாடுபட்டாவது அந்த தவறை சரி செய்து
நமக்கு வேண்டியவரின் அன்பை, நட்பை இழக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மனிதர்கள் அதிகமாக உழைப்பது,
ஒரு இலட்சியத்தை நோக்கி பயணிப்பது,
வெற்றிக்கு வேண்டி
ஊண், உறக்கமின்றி செயல்படுவது,
பணம் சம்பாதிப்பது ,
பதவியை அடைய முயற்சிப்பது
இது எல்லாம் எதற்கு என்று சிந்தித்தால்
ஒரே ஒரு பதில்தான்
சந்தோஷம், இன்பம் பெறுவதற்கு தான்
வேறு எதுவாக இருக்க முடியும்.