உபாதிகளற்றதும், சாந்தமானதும், முடிவற்றதும், ஒன்றேயாவதும் இரண்டற்றதும்
( பூமா ) அளவு கடந்தது எனக் கூறப்படுவதுமான பிரம்மம் எளிதில் அறியப்படுவதன்று.
உலகம் பிரம்மமே,
பிரம்மத்தினின்று பிரிதாக எது ஒன்றுமில்லை.
பிரம்மம் அல்லாது ஏதாவது ஒரு பொருள் தனித்திருப்பதாய்த் தோன்றினால்
அது கானல் நீரைப் போல் பொய்யானது