சூரியன், புதன், குரு, செவ்வாய், சனி ஆகியோர்கள் சுப பலம் பெற்றும் ஒங்கி இருந்தால், சிறந்த வழக்கறிஞர்கள் ஆவார்கள்.
சூரியன் பலமுற்று நீசம் பெற்று பாபருடன் சம்பந்தப்பட்டு 12ல் இருந்தால் வலது கண் பழுதுறும்.
சூரியன் நீச்சமாகவோ, உச்சமாகவோ இருப்பின் மனைவிக்கு அடங்கி வாழ்வர்,
மனைவி வார்த்தைக்கு கட்டுபடுவார். மனைவியின் மனம் கோணாமல் வாழ்வர்.
சூரியன், சந்திரன் இருவரும் 12 அல்லது 6 வது வீட்டில் இருப்பின் அவருக்கு ஒரு கண் தான் தெரியும்
அதேபோல் மனவிக்கும் ஒரு கண் தான் பார்வை ஏற்படும்.
சூரியன், சந்திரன் இவர்கள் கேந்திரத்திலோ அல்லது கோணத்திலோ இருந்து
ஒருவரை பார்க்கின் அந்த ஜாதகர் மனிதாபிமானி
மக்களால், மதிக்கப்படுவர், நல்ல செல்வாக்கு உடையவர்.