சூரியனையும், சந்திரனையும் போன்றே ஒளி மண்டலங்கள்
எதனுடைய ஒளியால் பிரகாசிக்கின்றனவோ, ஆனால்
எது அவற்றின் ஒளியால் பிரகாசிக்கப்படமாட்டாதோ,
மேலும் அனைத்துமே எதனால் பிரகாசிக்கின்றதோ
அதை பிரம்மம் என்று அறிந்தனுபவிப்பாயாக.
தீயானது ஒரு இரும்பு குண்டை உள்ளும், புறமும் வியாபித்து
எப்படித் தனது சக்தியால் பிரகாசிக்குமோ அப்படியே பரப்பிரம்மம்
உலகனைத்தையும் உள்ளும் புறமும் வியாபித்து தனது சக்தியால் பிரகாசிக்கிறது.