கடவுளைக் காண வாக்குவாதம் உதவுமா ?
ஆன்மீக அனுபவம் ஒன்றுதான் நமக்கு ஞானமாக அல்லது உண்மை மதமாக இருக்கிறது.
ஆன்மாவைப் பற்றி காலங் காலமாகப் பேசிக் கொண்டிருப்பதால் அதை நாம் அறிய முடியாது.
வெறும் கொள்கைகளைப் பேசுவதற்கும் நாத்திகத்துக்கும் இடையில் எவ்வித வேறுபாடும் இல்லை.
வெளிச்சத்தில் நான் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் எப்போதும் எனக்குச் சொந்தமாகிறது.
ஓரு நாட்டைச் சென்று பார்த்தால் பிறகு அது உன்னுடையதாகிவிடுகிறது.
நாம் ஒவ்வொருவரும் சுய அனுபவத்தைப் பெறவேண்டும்.
ஆசிரியர் உனக்கு உணவைத்தான் தர முடியும்,
அதை உண்டு ஜீரணிப்பது உன் வேலை.
தர்க்க ரீதியில் ஒரு முடிவுக்கு வருவதற்கு வாக்குவாதங்கள் உதவுமே தவிர
கடவுளைக் காண ஒருபோதும் அவை பயன்படா.