நீ நான் என்றும் வேற்றுமை உணர்வு எனக்கு இருக்கும் வரை கடவுள் நம்மைக் காப்பாற்றுகிறார் என்று பேசியே ஆகவேண்டும்.
அதன் விளைவுகளுக்கு நான்உட்பட்டுத்தான் ஆகவேண்டும்.
நம் இருவருக்கும் இடையில் இலட்சியமாக விளங்கும் மூன்றாவது ஒன்று இருப்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
இந்த முக்கோணத்தின் சிகரமாகத் திகழ்வது இந்த மூன்றாவது சக்தி.
நீராவி பனியாகி பின்னர் நீராகிறது. அந்த நீர் பிறகு கங்கையாகிறது.
ஆயினும் நீராவி நிலையில் இருக்கும் போது அங்கு நீர் இல்லை. படைப்பு அல்லது மாற்றம் என்னும் கருத்து
சங்கற்பத்துடன் பிரிக்க முடியாதவாறு இணைக்கப்பட்டுள்ளது.
இந்த உலகம் இயங்குகிறது என்ற எண்ணம் நமக்குத் தோன்றவே செய்கிறது.
புலன்களால் மயக்கம் ஏற்படுவதை பௌதீக விஞ்ஞானம் நிரூபிக்கிறது.
நாம் காண்பது, கேட்பது, முகர்வது, தொட்டு உணர்வது, சுவைப்பது எதுவும் உண்மை இல்லை என்று அது கூறுகிறது.
சில விளைவுகளை உண்டாக்கும் சில அதிர்வுகள் நமது புலன்களையும் பாதிக்கின்றன.
சார்புபற்றி நிற்கும் உண்மை மட்டுமே நமக்குத் தெரிகிறது.