எது நன்மை? என்று ஆராய வேண்டும்.
இந்த ஆராய்ச்சி மேற்கூறப்பட்ட ஐந்து திட்டங்களையும் பற்ற வேண்டும்.
எது நன்மை என்றால், எது மிதம், ஹிதம், மேத்யமோ, அது தான் நன்மை,
மிதமாக மட்டும் இருந்தால் போதாது என்பதால் தான் இம்மூன்றையும்
உள்ளடக்கிய ‘ யுக்தம் ‘ என்ற பதத்தை பகவான் வீசுகிறார். மிதமான
நன்மையைத் தரக்கூடிய சுத்தமான அல்லது உன்னதமானதே உசிதமானதே
தகுதியானது. சிலர் ” மேத்யம் ” என்ற பதம் உணவுக்குத்தான் உபயோகமாகும்.
மற்ற நான்கு திட்டங்களுக்குள் பிணையாது என்று வாதிக்கலாம். இந்த வாதம் ஒவ்வாது.