யுக்தம் என்ற பதத்தை பரமாத்மா ஒப்பற்ற அர்த்த புஷ்டியுடன் உபயோகித்திருக்கிறார்.
யுக்தம் என்ற பதத்தை உசிதமானது என்று மொழி பெயர்த்தால்தான்,
இதில் யுக்தம் அடங்கிய பல கருத்துக்களையும் வெளிப்படுத்தலாம்.
யுக்தம் என்ற பதத்திற்கு ‘மிதம்’ (MODERATE) என்று மட்டும் பொருள் கூறுவது.
சுலோகத்தின் ஆழ்ந்த விசாலமான கருத்துக்களைக் குறுக்குவதேயாகும்.
உசிதம் என்ற பதத்தை தகுதியான என்ற தமிழ் வார்த்தை விளக்கும்.
பரமாத்மா, யுக்தம் என்ற பதத்தை உணவு, ஓய்வு, உழைப்பு, தூக்கம், விழிப்பு
என்ற ஐந்து திட்டங்களுடன் இணைத்துள்ளார்.