சூரியனுனும் செவ்வாயும் கூடி எங்கிருந்தாலும் ஜாதகி இளம் விதவையாகும் அவலநிலை.
குருபார்வை ஏற்படின் இதற்கு விதிவிலக்கு உண்டாகும்.
சூரியனுடன் செவ்வாய் சேர்ந்து இருந்தால் பூர்வீகச்சொத்து நிலைப்பதில்லை.
தந்தை காலத்திற்குள் பூர்வீகச் சொத்து விரையமாகிவிடும்.
சூரியனுன் புதன் சேரும்போது, புதாத்தியயோகம், நிபுணத்துவயோகம் தரும்.
பட்டப்படிப்பு ஏற்படும். படிக்காத மேதையாக திகழ்வார்கள்.
சூரியனுடன் சனி சேர்ந்து இருந்தால் ஒருவரை ஒருவர் பார்த்தாலும்
அப்பாவுக்கும், பிள்ளைக்கும் ஒற்றுமை இருக்காது கருத்து வேறுபாடு ஏற்படும்.
சூரியனுடன் சுக்கிரன் சேர்ந்தால் மனைவி வழியில் பிரச்சனை ஏற்படும்,
கோர்ட், கேஸ், களத்திர தோஷமும் உண்டாகும்.