எதிர் செயல் இன்றியே செயல் நடக்கட்டும். செயல் புரிவது இனியது.
எதிர்ச் செயல் சகல துயரத்தையும் தருவது. குழந்தை கைவிரலை
தீ எரியும் விளக்கில் வைக்கிறது. அதில் இன்பம் இருக்கிறது.
ஆனால் அதன் உடலில் எதிர்ச் செயல் நிகழும்போது அது துன்பம் தருகிறது.
எதிர்ச் செயலை நம்மால் நிறுத்த முடியுமானால் பயப்படவேண்டியதில்லை.
மூளையைக் கட்டுப்படுத்து. பதிந்ததை அது அறியும்படி விடாதே.
சாட்சியாக இரு. எதிர்ச்செயல் புரியாதே. இவ்வாறு இருப்பது நமக்கு
மகிழ்ச்சியைக் கொடுக்கும். நம்மை மறந்த நிலையில் நாம் இருக்கும் போதுதான்
பெரு மகிழ்ச்சியை நாம் அடைய முடிகிறது. கடமை என்னும் கருத்துடனின்றி
சுதந்திர விருப்பத்துடன் செயல்புரி. கடமை என நமக்கு ஒன்றும் இல்லை.
இந்த உலகம் என்பது ஒரு பயிற்சிக் கூடம். அதில் நாம் விளையாடுகிறேhம்.
நமது வாழ்வு நமக்கு நித்தியமான விடுமுறை.