ஆத்மா வெளியே உள்ள பொருள்களைப் போல் அறியப்படுவதன்று.
அதில் பாகுபாடுகளும், வேற்றுமைகளும் இல்லை.
ஆகையால் அதை எவராலும் கொள்ளவோ தள்ளவோ இயலாது.
உள்ளும், புறமும் எங்கும் வியாபித்ததும் பிறப்பு, தேய்வு, மூப்பு, சாவு
முதலியவற்றிற்க்கப்பாற்பட்டதுமான ஆத்மா தான் என்ற அறிந்து
கொண்ட பின் ஒருவர் எதற்காக ஒரு சிறிதேனும் அஞ்சவேண்டும்?