பிரபஞ்சம் என்பது எண்ணம்.
அந்த எண்ணத்தை வேதங்கள் வார்த்தைகளால் வெளியிடுகின்றன.
இந்தப் பிரபஞ்சத்தை நம்மால் ஆக்கவும் அழிக்கவும் முடியும்.
மந்திரங்களை உச்சரிக்குந்தோறும் காட்சிக்கு எட்டாதிருந்த எண்ணம்
உருப்பெற்று புறப்பொருளாகத் தோற்றம் அளிக்கிறது.
இப்படி கர்ம காண்டத்தில் இருப்பதாக ஒருசாரார் கூறுகின்றனர்.
நம்மில் ஒவ்வொருவருக்கும் படைக்கும் ஆற்றல் உண்டு என்று அவர்கள் கருதுகின்றனர்.
மந்திரங்களை உச்சரிப்பதால் அவற்றுக்குத் தொடர்புள்ள எண்ணம் உருவாகிறது.
விளைவையும் கண்கூடாகக் காணலாம்.
எண்ணம் என்பதுசெயலின் ஆற்றல்.
எண்ணத்தின் வெளிப்பாடே சொல் என்று மீமாம்சகர்கள் கூறுகின்றனர்.
அவர்கள் இந்து சமயத்தில் ஒரு பிரிவினர்.