நிதர்சனமான உண்மையை அறிந்து கொள்ள மனிதனால்
முடியாததற்கு காரணம் மனிதனால் நேர்மையாய் இருக்க முடியவில்லை,
காரணம், மனிதனுக்கு நேர்மையாய் இருக்க வேண்டும் என்ற ஆசையும்,
வைராக்கியமும் இல்லை. இன்னொரு விதத்தில் சொன்னால் நேர்மையாய்
இருப்பது மிக கடினமாக இருக்கிறது. அதிலும் உண்மையாய் இருப்பதோ
மிகப்பெரும் சுமையாய் இருக்கிறது. காரணம், உண்மையென்பது மனம் சம்பந்தப்பட்டது,
அறிவு சம்பந்தப்பட்டதல்ல, உண்மையை மறைப்பது தான் அறிவு சம்பந்தப்பட்டது.
அதனாலேயே மனிதன் ஆரவாரமாகவும் அகம்பாவத்தோடும் பொய்மையுடனுமே
வாழும் வாழ்க்கையை, சாபமாக அல்ல வரமாக பெற்று பல்லாண்டுகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்.