குருவுடன் சந்திரன் சேரும்போதும் ஒருவரையொருவர் பார்க்கின்றபோதும்
“குருசந்திர யோகத்தை “வாரி வழங்குகிறார்
“கூரப்பா இன்னமொரு புதுமை சொல்வேன்
குமரனுக்கு குருசந்திர பலனைக்கேளு
சீரப்பா செம்பொன்னும் மனையுங்கிட்டும்
ஜெனித்ததொரு மனைதனிலே தெய்வங்காக்கும்
கூரப்பா கோதையரால் பொருளும் சேரும்
குவலயத்தில் பேர் விளங்கோன் கடாட்ச முள்ளோன்
ஆரப்பா அத்தலத்தோன் மறைந்தானானால்
அப்பலனை யரையாதே
புவியுளோர்க்கே”
பாடல் விளக்கம்:-
குரு சந்திரயோகத்துடன் பிறந்தவர்களுக்கு
மிகவும் செம்பொன்னும் நன்மனையும் வாய்க்கும்
.அவன் பிறந்த மனையில் தெய்வம் இருந்து காக்கும்.
மனைவி வழியில் தனலாபம் ஏற்படும்
பூமியில் பேரும்புகழும் பெற்று இறையருளோடு நீடோடி வாழ்வான்.