எல்லைகோடுகள் பல விஷயங்களில் அமையும். படிப்பு, தொழில், பணம், பதவி, என்று எத்தனையோ விஷயங்களில் அது தலை தூக்கும்
அதன் பின் ஓடுபவரால் நிச்சயமாய் தனக்குள் இருப்பதை
தனக்குள் பிரயாணிப்பதை
தன்னை அறிதலை போன்ற விஷயங்களை ஏற்கவே முடியாது
ஆனால்
எத்தனை ஓடியும் எப்படி ஓடியும் எல்லைக்கோட்டின் அருகில்கூட வரமுடிய வில்லையே என்பவனுக்கு தான்
ஏன் என்ற கேள்வி வரும்
அது
அவனை தன்னையறிதலுக்கும் தன்னையறிந்தவர்களின் கூட்டத்திற்கும் அவனை அழைத்துச் செல்லும்.
அது அவனுக்கு தனக்குள் பிரயாணிப்பதையும்,
தன்னையறிதலையும்,
அறிமுகப்படுத்தும்.