தத்துவம் தெரிந்த வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுதல் என்பது எல்லோருக்கும் நியதி இல்லை.
சட்டென்று சிலருக்கு வாழ்க்கையே தத்துவம் ஆகிவிடுகிறது.
இந்த இடத்தில்
தத்துவம் என்றால் என்ன என்ற வினா வருகிறது
அந்த வினாவிற்கு பதிலாக
பெரியவர்களின் போதனைகள் என்ற பதில் வரும்
பெரியவர்கள் என்றால் யார் என்ற வினாவும் வரும்
அதற்க்கு பதிலாக
வயது அனுபவம் போன்றவை விடையாக வரும்
வயது சரி அனுபவம் என்றால் என்ன என்ற வினாவும் வரும்
கூடவே ஒருவருக்கு எல்லா அனுபவங்களும் வாழ்க்கையில் கிடைத்திருக்குமா என்ற சந்தேகமும் வரும்
இப்படியாக வினா விடை என்று போய்க்கொண்டே இருந்தால்
முடிவாக தன்னை அறிந்தவர் எவரோ அவரே பெரியவர் என்பதில் போய் பதில் நிற்கும்
அப்படி தன்னை அறிந்தவர் சொல்வது தத்துவமாகும்
அந்த தத்துவங்களை அறிய அறிவு மட்டும் போதாது
அனுபவித்தல் என்ற நிலையும் வேண்டும்
அப்போது தான் அந்த தத்துவம் புரியும்
அனுபவத்திற்கும் வரும்
அப்படிப்பட்ட வாழ்க்கை தான் எல்லோருக்கு அமைவதில்லை
அப்படிஅமைந்தால்
அது வரம்
அப்படிதான் சொல்லமுடியும்