கிராம வாழ்க்கையில் ஓய்வுடன் இருப்பவர்
இவைகளையும் செய்யலாம் மலப்போக்குக்குக் கூட
செம்பு தூக்கப் பண்ணையாள் இருக்கும் பொழுது,
இந்த கிராம சுக புருஷர்கள் உழைப்பிற்கு இறங்குவதும்
ஆகாததாகத் தோன்றுகிறது. பணம் பெருக, நடையும் இல்லாமல் போய்விடுகிறது.
நோய் தடுத்தலுக்கு உழைப்பு, அவசியமென்று விளக்கினேன்.
இந்த உழைப்பும், ஒழுக்கமும் தானத்துடன் கலந்திருக்க வேண்டும்.
உழைப்பே நோயற்ற வாழ்க்கைக்கு முக்கியமானால்.
ஓயாது உழைத்துக் கொண்டிருக்கும் தொழிலாளியிடம்
ஆரோக்கியப் பெருக்கைக் காணோமே என்று வினவலாம்.
இந்த சந்தேகத்தை நினைத்தே நோயற்ற வாழ்க்கையை
உணவு ஒழுக்கத்துடன் பிணைத்துள்ளேன்.