சுபக் கிரகங்கள் திரிகோண பலத்தில்
பகை நீச்சம் பெற்றிருந்தால்
ஆதிபத்தியத்தின் அடிப்படையில்
சுபாதிபத்தியத்திற்கு பாபியாகவும்,
பாப ஆதிபத்தியத்திற்கு எதிர்பாராத நன்மையைத் தரும்
யோக கிரகமாகவும் மாறி
ஜாதகரின் வாழ்க்கையில் சுபாசுபப் பலன்களை வழங்கும் என்பது விதி.
சூரியன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் 1,4,7ல் அமர்ந்து
சனி 1,4,10ல் அமர்ந்து இதர கிரகங்களால் பார்க்கப்படும் போதும்,
இவர்களுடன் சேரும் போதும்
அந்தந்த கிரகங்களின் ஆதிபத்தியம் அடிப்படையில்
இவர்களுக்கு சம்பந்த பலன் ஏற்படும்.
இந்த சம்பந்த பலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள்
கேந்திரத்தில் இருக்கும் கிரகங்களுடன் சேரும் போதும்
சம்பந்த கிரகங்களின் பலத்தின் அடிப்படையில் பலன்கள் அமையும்.