சாம்பாதித்யர்
கிருஷ்ண அவதாரத்தின் போது,
கிருஷ்ணருக்கு மகனாக பிறந்தவனின் பெயர் சாம்பன்.
இவன் ஒரு முறை தொழு நோய் பாதிப்புக்கு உள்ளானான்.
தனது மகனின் துன்பத்தைக் கண்ட கிருஷ்ணன்,
சூரியனை வழிபடும்படி மகனுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து காசிக்கு வந்த சாம்பன், சூரிய பகவானை
வழிபட்டு நோய் நீங்கப் பெற்றான்.
அவன் வழிப்பட்ட சூரியனை,
காசியில் சாம்பாதித்யர் என்ற பெயரில் காண முடியும்.