ஆத்மாவையே எப்பொழுதும் தியானம்
செய்பவனுக்குக் காலம் முதலியவற்றால்
ஆகவேண்டியது ஒன்றுமில்லை,
ஏனெனில்
ஆத்மா பரிசுத்தமான அறிவொளி வடிவானது,
அதனிடம் அஞ்ஞான இருளில்லை.
ஆத்மாவிற்கு உபாதிகள் ஏதுமில்லை,
அது வர்ணிக்க முடியாதது,
பகுக்க முடியாதது, குணங்களற்றது,
பரிசுத்தமானது, வாக்கிற்கும்
மனத்திற்கும் எட்டாதது.