தன்னைப் போல் பிறரையும்,
பிறவற்றையும் உணரும் அறிவு உண்டாகும்.
இந்தக் கல்வி கிடைக்க
நாம் நமக்குள் போரட வேண்டும்.
கடைகளிலும், கல்லூரிகளிலும் இது கிடைக்காது.
கூவிக்கூவி விற்பனைக்கு வருவது அல்ல
இந்த கல்வி.
இந்த கல்வியை படித்தவனையே ஞானஸ்தன் என்கிறோம்.
பற்றற்று
இவனால் எல்லா காரியங்களையும் செய்ய முடியும்.
தன் மரணத்தை
தானே சந்தோஷமாய்
அழைக்கும் தகுதியை
இந்த கல்வி தரும்.