குறைகள் கூறி யாரும் வெற்றியாளர்கள் ஆனதில்லை.
நீங்கள் ஒன்றைப்பற்றி
ஒருவரை பற்றி குறை கூறும் போது
உங்கள் மனதில் விஷ கறை படிகிறது.
மற்றவர்களுக்கு உங்கள் மேல் தவறான எண்ணங்கள் ஏற்படுகிறது.
குறைகள் விஷத்திற்க்கு ஒப்பானவை.
அது மனிதனை பல வழிகளில்
நிலைகளில் துண்டாக்கி துன்பத்திற்க்கு ஆளாக்குகிறது.
மகிழ்ச்சியை,
ஆனந்தத்தை விரும்பும் எவரும்
குறை கூறுவதை நிறுத்துங்கள்
குறை கூறும் மனதிற்குள்
ஆக்கபூர்வமான
நல்ல எண்ணங்களை விதையுங்கள்
அது
உங்களுக்குள் ஆனந்த மலர்களை பூச்சொறியட்டும்.