உழைப்பற்றால் பசி எடுக்காது.
ஜீரணம் குறையும். பித்த சோகம் ஓய்வெடுக்கும்.
ரத்தவோட்டம் மந்தமாகும். சுவாசநடை தாறுமாறாகும்.
பூர்ண சுவாசமுண்டாகாது.
சதைக்கூட்டங்கள் பல உழைப்பின்மையால்
முதுமை அடையும். தூங்கும், அழுகும்.
உடல் கொழுக்க இருதயத்தின் மேலும் கொழுப்பு இறங்கும்.
சகல வியாதிகளுக்கும் மூல காரணமான
மலச்சிக்கல் உண்டாகி அதிகரிக்கும்.
உழைப்பற்ற மானிட சரீரத்தை கண்ணால் பார்க்கச் சகிக்காது.
தையல்காரனைக் கூப்பிட்டு அவனுதவியால் தான்
” இதுவும், மனித சரீரம் ” என்று அறிய வேண்டும்.
எளிதில் நோய் பற்றும், பற்றிய நோய் எளிதில் போகாது.
பலவிதக் கோளாறுகளை உண்டுபண்ணும்
மூளை, நரம்புசக்தி தாக்கப்படும், கோபதாபங்கள் அதிகரிக்கும்
பயம், மூளைக் கோளாறுகள் உண்டாகும்.