இந்த உழைப்பை நடத்தல், ஓடுதல், ஏறல்,
இறங்கல், பிடித்தல், விழுதல், கடித்தல், மடித்தல்,
நீட்டல், திருப்பல் என்று முக்கிய பாகங்களாகப் பிரிக்கலாம்.
இச்செயல் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு
விதமான சதைக் கூட்டங்கள், ஒவ்வொரு தொகுதி நரம்புகள்,
நரம்புவலைகள், சக்கரங்கள், சக்திகள் உபயோகமாகின்றன.
சதைக்கூட்டமும் ஒவ்வொருவித சக்தியை
உபயோகித்து பலனுண்டாக்குகிறது.