எப்போது பொருளாதார சிந்தனை பெண் இனத்திற்குள் ஊடுருவி வேர் விட்டதோ
அன்றே சமுதாயத்தில் தவறுகளின் காலம் தொடங்கி விட்டது எனலாம்
மனிதனின் தேவைகள் என்பவற்றில்
ஆசைகள் ஆட்சி செய்து
ஆசைகள் எல்லாம் தேவைகளே எனும் நிலைக்கு வந்தது
அப்போதுதான்
பொறுப்பற்றதன்மையும், வேகமும், முரட்டுதனமும், சினமும்,
ஆதிக்கம் செலுத்தும் மனோ பாவமும் ஆணின் இயற்தன்மை.
அச்சம், மடம், நாணம், பொறுப்போடு இருத்தல் அன்பு செலுத்துதல்,
அரவணைத்தல் அடங்குதல் பெண்ணின் இயற்தன்மை
இவற்றில் குறையோ, மாறுபாடோ தோன்றினால்
அடிப்படை எங்கோ தவறாகிவிட்டது என்று அர்த்தம்
அந்த தவறை தெரிந்தவுடன் சரி செய்தால் தப்பிவிடலாம்
இல்லாவிட்டால் தத்தளிக்கலாம்
இப்போது நாம்
தத்தளிக்கும் நிலையையும் தாண்டி விட்டோம்
இனி வரும் காலம் மிக கொடுமையானதே.