சந்நிபாத குறி …..
கறுப்பு வன்னமாய் மூத்திரநிறமிருந்தால்
சந்நிபாதமென்றும் தெரிந்துக் கொள்ள வேண்டியது.
பிரசூதி தோஷ குறி …..
மஞ்சள் நிறமும் உபரிபாகத்தில் கிருஷ்ண வர்ணத்துடன்
புத்புதாகாரமாய் மூத்திரம் விசர்ஜனமானால் பிரசூதி
தோஷமென்றும் அறியவேண்டியது.
பித்த வாத கப சுராதிக்க குறி …..
பித்தாதிக்கத்தில் மஞ்சள் நிறமும், வதாதிக்கத்தில் ரத்தநிறமும்,
கபாதிக்கத்தில் நுறை நுறையாயும், சுராதிக்கத்தில்
புகை நிறமும் தோணுகின்றது.
மேலும் தயிலபிந்துவை மூத்திரத்தில் விட்டு அதனால் தோணுகின்ற
உருவங்களைத் தெரிந்து அதன் சுபாசுபங்களை அறிந்து சிகிச்சை செய்தல் வேண்டியது.