புத்திமான் தன்னுடைய அறிவால் காணும்
உலகனைத்தையும் ஆத்மாவில் ஒடுக்கி
ஆத்மாவானது களங்கமற்ற ஆகாயம்
போன்றதென்று எப்பொழுதும் தியானிக்க வேண்டும்.
அருணோதயத்தால் இருளானது முதலில் நீக்கப்பட்ட
பின் சூரியன் தானே பிரகாசிப்பது போல் அஞ்ஞானம்
ஞானத்தால் நீக்கப்பட்ட பின் ஆத்மா தானே பிரகாசிக்கும்.