இந்தியா அழிந்து விடுமா?
அது அப்படி அழிந்து விடுமானால்
உலகிலிருந்து எல்லா ஞானமும் அழிந்து போய்விடும்.
நிறைந்த ஒழுக்கங்கள் எல்லாம் மறைந்தே போய்விடும்.
சமயத்தின் மீது நமக்குள்ள
இதயபூர்வமான இனிய அனுதாப உணர்ச்சிகள் எல்லாம் அழிந்து போய்விடும்.
எல்லா உயர்ந்த இலட்சியங்களும் மறைந்து போய்விடும்.
எல்லா உயர்ந்த இலட்சியங்களும் இருந்த இடத்திலே
காமமும், ஆடம்பரமும்,
ஆண் தெய்வமாகவும், பெண் தெய்வமாகவும்
குடிகொண்டு ஆட்சி செய்யும்.
பணமே அங்கு பூசாரியாக உட்கார்ந்து கொள்ளும்.
வஞ்சகம், பலாத்காரம், போட்டி ஆகியவற்றை
அது தன்னுடைய பூஜைக் கிரியை முறைகளாக வைத்துக் கொள்ளும்.
மனித ஆன்மாவையே அது பலிபீடத்தில் பலியாக்கும்.
ஆனால்
அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி
என்றுமே நடக்கப் போவதில்லை
காரணம்
பூகோள வரைபடத்தால் உருவானது அல்ல இந்தியா
ரிஷிகளின் தவ பலத்தாலும்
சித்தர்களின் தவ பலத்தாலும்
கட்டமைக்கப்பட்டது இந்தியா
அழியாத வேதங்கள்
இந்தியாவை என்றும்
காத்து நிற்கும்
காலத்தாலும்
கலாச்சார மாறுபாட்டாலும்
கரைந்து போவது அல்ல
இந்தியா
காலங் காலமாய்
காலமாய் இருப்பதே
இந்தியா