ஆத்மா
ஸத்தும் சித்துமே வடிவான ஆத்மாவை இடைவிடாத
அப்பியாஸத்தாலன்றி அறிய முடியாது.
ஆகையால் ஞானத்தை நாடுபவன் தன்னுடைய லக்ஷியத்தையடைய
நீண்ட காலம் தியானம் பழக வேண்டும்.
ஒரு விளக்கானது குடம் முதலியவற்றைப் பிரகாசப்படுத்துவது
போல் ஆத்மா ஒன்றே புத்தி முதலியவற்றையும் இந்திரியங்களையும்
பிரகாசப்படுத்துகிறது. ஜடமான அவற்றால் ஆத்மா பிரகாசமடைவதில்லை.