வேதாந்தத்தின் விஷயமான ஞானம் சித்தித்தால்,
ஜீவனே பிரம்மம் என்ற அனுபவம் ஏற்படும்.
அதனால் ஒருவன் பிறவித் தளையினினின்று முற்றும் விடுபடுகிறான்.
ஆத்ம ஞானத்திற்கொப்பாவது வேறெதுவுமில்லாமைாயல்,
ஒருவன் எப்பொழுதும் சீடனுடைய குணங்களைக் கைக்கொண்டு
ஞானத்தைச் சம்பாதித்துப் பிறவிக்கடலைக் கடந்து செல்லவேண்டும்.