நான் என்பதை அறிந்து
அந்த நானிலிருந்து விலகி நின்று
வேடிக்கை பார்த்தலே வெற்றி
மற்றபடி
எந்த வெற்றியும் வெற்றி ஆகாது
அந்த நான் என்பது என்ன
என்ற வினா தனக்குள் வரும் போது
நான் என்பது உடலா, இல்லை மனமா என்ற வினா வரும்
அது சரியா என ஆராய
பொறுமை, நிதானம், அமைதி, சாந்தம், விடாமுயற்சி,
இது அத்தனையும் தேவை
இவைகளை கைகொள்ளும் போது
அன்பு ஊற்று எடுக்கிறது.
அந்த அன்பு தனக்குள் பெருக, பெருக
பார்க்கும் இடங்கல்லாம் நந்தலாலா
நிந்தன் பசுமை நிறம் தோன்றுதடா நந்தலாலா
எனும் உணர்வு போல்
பார்க்கும் இடங்கலெல்லாம்
நான் இருப்பதை அறியலாம் .