எண்ணம் எனும் விதை
பல தரத்தில் இருக்கிறது.
அந்த விதைகளில்
சில
காம, குரோத, லோப, மோக, மத, மாச்சரியம்,
அன்பு, காதல், பாசம், நேசம், நட்பு, தியாகம், பரிவு, பண்பு,
இத்தனை விதைகளும் வளர்ந்து
மனிதனை பல விதங்களில் இம்சை படுத்துகிறது.
சந்தோஷபடுத்துகிறது.
இறப்பில் இவை அத்தனையும் நிறைவு பெற்றதாய்
சக மனிதன் நினைக்கிறான்.
ஆனால்
சாஸ்திரம்
இவை அனைத்தும் தொடரும் என்கிறது.