பஞ்ச பூத தத்துவத்தில் மனதை ஆகாய தத்துவமாக சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால் எனக்கென்னவோ தோன்றுகிறது.
மனம் நிலத்தத்துவமோ என்று
ஏனென்னறால் நிலம் தானே.
எந்த விதையையும்வளர செய்கிறது.
அது மாதிரி எண்ணம் எனும் விதை மனதில் விழுந்தவுடன்
மிக வேகமாக எண்ணம் வளர்ந்து விடுகிறது.
அது பிறகு பல விதங்களில் ஆடுகிறது.
அந்த ஆட்டத்தில் மனிதன்,
மனித குலம்
தடுமாறி தள்ளாடி ஆடுகிறது.
அதில் ஏற்படும் கலக்கம் குழப்பம் பயம்
மனித குலத்தை படுத்தும் பாடு சொல்லிமாளாது.