தோஷ குறி
பாத்திரத்தில் விட்ட தயில பிந்துவானது
பரவினதுப்போல் இருந்தால் வாத ரோகமென்றும்,
குமிழி குமிழிப்போல் கிளம்பினால், பித்தரோகமென்றும்
உருவமாய் தோணினால் கபரோகமென்றும்
தயில பிந்து உண்ணாக முழுகிவிட்டால் அசாத்தியமென்றும் அறியவேண்டியது.
சாத்தியா சாத்திய ரோக குறி …..
அந்த தையில பிந்துவானது வியாபித்தால் ரோகம் சாத்தியமென்றும்
மேலாக முட்டை முட்டையாய் கிளம்பினால் கஷ்டசாத்தியமென்றும்,
மேல் எம்பாமல் முழுகிவிட்டால் அசாத்தியம் என்றும்
அந்த ரோகி சீவிக்க ( மரணம் ) மாட்டானென்றும் அறியவேண்டியது.