தூக்கத்தில் உடலியந்திரங்கள் எல்லாம் ஓய்வெடுக்கின்றன.
செத்த அணுக்கள் புதுப்பிக்கப்படுகின்றன.
உழைப்பில் செலவான பிராண சக்தி.
மறுபடி சேகரிக்கப்படுகின்றது.
மூளை, நரம்புகள், அமைதி, ஆரோக்கியம் பெறுகின்றன.
ஓய்வற்ற இருதயமும் ஸ்வாசக்கருவிகளும், சிரமக் குறைவுடன் வேலை செய்து,
வீரியம் பெறுகின்றன.
சுவாசம் நிதானமும் அமைதியும் அடைகிறது.
செத்த, உதவாத அணுக்கள் ஒதுக்கி அகற்ற ஏற்பாடாகின்றன.
உணவற்றுப் பலநாள் இருந்தாலும்
உடலுக்குக் கேடு அவ்வளவு இல்லை.
ஒரு நாள் தூக்கமில்லாமல் இருந்தால்
ஜீவன் படாத பாடு படுகின்றது.
பைத்தியம் பிடித்துவிடும் போல் தான் இருக்கும்.
இயற்கையின் ஒரு பெரிய சட்டம், நித்திரை,
இதைக் கெடுப்பவர்,
உயிர் வீரியத்தைக் கெடுத்துக் கொள்ளுவார்கள்.