ஒழுக்கத்தை சில முக்கிய பழக்கங்களாகப் பிரிக்கலாம்.
அவைகளாவன,
குளித்தல், தூக்கம், போகம், பழக்கம்.
ஸ்நானம் அல்லது குளித்தல்
உடலின் வெளிப்பாகத்தை சுத்தமாக வைக்கின்றது.
தோல்களில் பதிந்துள்ள வியர்வை,
தைலம் கசியும் எண்ணற்ற துவாரங்களை அடைத்து விடாமல்
அழுக்குகளை வெளியே தள்ளி
தம் தொழிலைச் சரிவரச் செய்ய உதவுகின்றது.
நரம்பு சக்தியைப் பொதுவாக அதிகரிக்கின்றது.
தோல் நோய் ஏற்படாமல் காக்கின்றது.
உடல் சூட்டைக் குறைக்கின்றது.
தினம் குளித்தல் அவசியம்.
குளிர் நீரில் குளித்தலே
சீதோஷ்ண ஸ்திதி மாற்றத்தால்
உடல் சீர்கெடாமல் காக்க உதவும்.