ஒருவருக்கு கடவுள் நம்பிக்கை ஏன் வருகிறது
வாருங்கள் சிந்திப்போம்.
முதலில்
நமது ஆசைகள் நிறைவேறும் என்ற நம்பிக்கை.
இரண்டாவது
ஏதோ ஒரு சிலருக்கு கடவுளை காணவேண்டும் என்ற ஆர்வம்.
மூன்றாவது
நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களால் நமக்கு ஏற்படும் கலக்கம்
அந்த கலக்கத்திலிருந்து விடுபட
நாம் கொள்ளும் நம்பிக்கைக்கு உரிய பொருள் கடவுள்.
நான்காவது
நம்மை சுற்றியிருக்கும் ஏதோ சிலர் சொல்லும் வார்த்தையான
கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டால்
நரகத்திற்க்கு போவாய் என்ற வார்த்தையால் ஏற்பட்ட பயம்
அது மட்டுமல்ல
சொர்க்கம் எதுவென்று தெரியாவிட்டாலும்
அதை அடைய வேண்டும் எனும் ஆசை.