நிகழ்சிக்கு அர்த்தம் காண முயலுவது
காரியத்துக்கு காரணம் தேடும்
பகுத்தறிவின் சாபக்கேடு.
இதை ஏன் சாப கேடு என்று சொன்னார்கள்
பகுத்தறிவு என்பது சாப கேடா
பகுத்தறிவு எப்படி சாப கேடு ஆகும்
இப்படி கேள்வி முளைத்து சிந்திக்கும் போது
சில விஷயங்கள் விடையாய் வருகிறது
அப்படி வந்ததை வைத்து பார்த்தால்
பகுத்தறிவு சாப கேடு தான் என்ற முடிவுக்கு
வரவேண்டியுள்ளது
பகுத்து பார்க்கும் போது புத்தி அதிகமாய் வேலை செய்கிறது
அப்படி வேலை செய்யும் புத்தி
எதனுடனும் இணைவதில்லை
அது இணைகிறது என்றால்
லாபம் இருந்தால் மட்டுமே இணைகிறது
இப்படி லாபம் பார்க்க மட்டுமே
பகுத்தறிவு உதவுவதால்
அது சாபக்கேடு தான்
இன்னுமொன்று
பகுத்தறிவால் உணர்வுகளை உண்டாக்கவோ
உணர்வுகளை புரிந்துகொள்ளவோ முடிவதில்லை
அதனாலேயே
பகுத்தறிவு சாப கேடு தான் என்ற முடிவுக்கு
வரவேண்டியதாய் இருக்கிறது
இந்த முடிவுக்கு எல்லோரும் வர வேண்டியது இல்லை
ஆனால் சரியாய் சிந்திக்கும் எவரும்
இந்த முடிவுக்கு மட்டுமே வருவார்கள்