2 – க்குரியவர் 6, 8, 12 – ல் மறைந்து, வக்கிரம், அஸ்தமனம் யுத்தத்தில் இருந்து,
2 – ஆமிடத்தில் சந்திரனுடன் ராகு, சனி சேர்ந்து இருந்தால் பேய், பிசாசுகளின் தொல்லையால்
உடல், ஆரோக்கிய குறைவும், நிம்மதி அற்ற வாழ்க்கையும் ஏற்படும்.
இந்த கிரக அமைப்பை, அல்லது இக்கிரகங்கள் அமர்ந்திருக்கும் ராசிநாதனை
குரு பார்த்திருந்தால் தெய்வ பலத்தினால் உடன் நிவாரணமும், தெய்வபலமும் ஏற்படும்.
2, 8, 9 – க்குரியவர் கூடி கேந்திரம் பெற்று லக்கினாதிபதியால், பார்க்கப்பட்டால் சில காலம் துன்பத்தில்
பல வகையான பாதிப்புகளால் தள்ளப்பட்டு, 40 வயதிற்கு மேல் சுய முயற்சியால்
பல தொழில் நுட்பங்களை அறிந்து செல்வமும், செல்வாக்கும் பெற்று வளமோடு இருப்பான்.