Skip to content
மற்ற சாதனங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில்
ஞானம் தான் மோக்ஷத்திற்கு நேரான சாதனம்
என்பது தெளிவாகின்றது. நெருப்பில்லாமல் எப்படிச் சமையல்
இயலாதோ அப்படி ஞானமில்லாமல் மோக்ஷம் இயலாது.
தேத்தாங்கொட்டைப் பொடியானது தண்ணீரைச் சுத்தமாக்கிவிட்டுக்
கீழே படிந்து விடுவது போல் ஞானமானது அஞ்ஞானத்தால்
அழுக்கடைந்த ஜீவனை அப்பியாசத்தால் அழுக்கற்றவனாக்கி
விட்டுத் தன்னையும் மறைத்துக் கொள்ளுகிறது.
Go to Top