ஸ்வீடன் நாட்டின் ஆராய்ச்சி நிறுவனம் S.I.PRT – அதன் ஆண்டு புத்தகத்தில் 2021 எனும் தலைப்பில்
உலகில் அணு ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளை பட்டியல் இட்டுள்ளது
இந்த புத்தகத்தின் படி 9 நாடுகள் மட்டுமே உலகில் அணு ஆயுதங்களை வைத்துள்ளது.
அந்த நாடுகள் அமெரிக்கா – 5,800, ரஷ்யா – 6375, பிரான்ஸ் – 290, இங்கிலாந்து 225, இஸ்ரேல் – 90
வட கொரியா 40 லிருந்து 50.
இந்த புத்தக ஆய்வின் படி உலகெங்கும் உள்ள மொத்த அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 13,080,
இதில் 2000 அணுகுண்டுகள் செயல்பாட்டு எச்சரிக்கையுடன் இருக்கிறது
அதாவது READY TO USE எனும் நிலை.
இந்த நிறுவனத்தின் ஆய்வரிக்கையை முழுவதும் நாம் நம்பாவிட்டாலும் ஒரு 50 சதவிகிதத்தை நம்பினாலே
நமக்கு என்ன தோன்றகிறது.
1. பயம், ஆம் எதிர்காலம் பயத்துடனும், பதற்றத்துடனும் தான் தெரிகிறது.
2. எதற்க்கு அணு ஆயுதங்கள் என்ற வினா
பதில் இரண்டுவிதமாகத்தான் இருக்கும் என்று தோன்றுகிறது.
1. நான் உன்னைவிட பலமானவன், அதனால் நீ என் சொல்படி கேள் அடங்கியிறு என்று பிற நாட்டினர்க்கு
சொல்வதற்க்கு,
2. வது பயம், உச்சகட்ட பயம் யாராவது நம்மை ஏதாவது செய்து விடுவார்களோ எனும் பயம்
அதுதானே இந்த அணு ஆயுத உற்பத்திக்கு காரணம் வேறு என்ன சொல்ல
இந்த நிலை இப்படி இருக்க சாதாரண குடிமக்களோ, மனிதனோ, சுகங்களை,
இலட்சியத்தை கொண்டு இருக்கிறான்,
ஏதோ ஒரு நாட்டை ஆளும், ஏதோ ஒரு நபர், ஏதோ ஒரு சூழ்நிலையில், ஏதோ ஒரு மனோ பாவத்தில்,
ஒரு முடிவை எடுத்தால் பூமியில் உள்ள மக்களின் கதி, பூமியின் கதி கேள்விக்குறிதான்.