பிணியை தடுக்க விரும்பினாலும் சுகமாக வாழ விரும்பினால்
உட்கொள்ளும் உணவானது
1. தேவையான உழைப்பு, ஜீவித நடைக்குத் தேவையான உஷ்ணப்
பிரமாணத்தைக் கொடுக்க வேண்டும்.
2. செத்த அணுக்களை புதுப்பிக்கும் சக்தி கொண்டாதாக வேண்டும்.
3. வளரும் வயதானால், வளர்ச்சி பெற பொருள் கொண்டதாக வேண்டும்.
4. உட்கருவிகள், கோளங்கள் தம், தம் தொழிலுக்குத் தேவையான
பொருள்களைப் பெற உதவுவதாக இருக்க வேண்டும்.
5. ஜீவிதத்தில் ஏற்படும் பிழைகளைத் திருத்தி வாழ, சத்துக் கொண்டதாக
இருக்க வேண்டும்.
இத்திட்டங்களைக் கண்டு, இவைகளை யார் தினம் தேடி நிற்பதென்று
தயங்க வேண்டாம். சாதாரணமாக கிடைக்கக் கூடிய உணவுப்
பொருள்களில் மேற்கூறிய அம்சங்கள் உண்டு. இவைகளுள் சேர்க்கைதான்
சிறிது கவனிக்கத் தக்கது. அவைகள் அடிமை நாக்குக்குத் தக்கவாறு சிதையாமல்
பாதுகாக்க வேண்டியதும் அவசியமாகின்றது.